Categories
மாநில செய்திகள்

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டிக் டாக் பிரபலம்… பெரும் பரபரப்பு..!!

14 வயது சிறுமியை டிக் டாக் பிரபலம் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்கள் சுதந்திரம் என்பது வெறும் பேச்சுவார்த்தையில் மட்டும்தான் இருக்கின்றது. ஏனெனில் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பெண்கள் வெளியில் சென்று பாதுகாப்பாக வீடு திரும்புவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறி கொண்டே வருகின்றது. தண்டனைகள் கடுமையாக்கபட்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகின்றது. தற்போது விசாகப்பட்டினத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

விசாகப்பட்டினத்தை சேர்ந்த பன்பக்கெட் பார்கவ் என்று டிக் டாக் பிரபலம் 14 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதையடுத்து அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளது அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. பின்னர் அந்த சிறுமியின் பெற்றோர்கள் பார்கவ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் காவல்துறையினர் அந்த இளைஞனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |