Categories
தேசிய செய்திகள்

14 வயது சிறுமிக்கு மது கொடுத்து… கூட்டு பாலியல் வன்கொடுமை…. அரசியல் பிரமுகர் மகன் கைது….!!!!

மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகனால் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து உறுப்பினர் சமர் கோலியின் மகன் சோஹல் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அந்த விழாவிற்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி சென்றுள்ளார். பிறந்தநாள் விழா முடிந்து வீடு திரும்பிய போது பாதிக்கப்பட்ட சிறுமியின் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் அவசர அவசரமாக உள்ளூர் சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டு உள்ளது. அந்தப் பெண் தனியாக விருந்துக்கு சென்றாரா அல்லது சக நண்பர்களுடன் சென்றாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் விருந்தில் மது அருந்தும் படி வற்புறுத்த பட்டதாகவும் ஒரு பெண் மற்றும் அடையாளம் தெரியாத ஆண்களால் அவர் வீட்டில் இறக்கி விடப்பட்ட தாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் சோஹல் தன்னை அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சோஹலை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், அவரது தந்தையும் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகருமான சமர் தனது குடும்பத்தினருடன் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Categories

Tech |