கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பற்றி அறியாதவர் யாருமே இருக்க மாட்டார்கள். இவர் தன்னுடைய 16 வயதில் பாகிஸ்தான் கராச்சியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். இவர்தான் மிக சிறிய வயதில் இன்டர்நேஷனல் கிரிகெட் மேட்சில் விளையாடினார் என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ஆம் ஆண்டு தன்னுடைய 16 வயதில் தான் இன்டர்நேஷனல் கிரிகெட் மேட்ச் விளையாடினார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஹசன் ரசா கடந்த 1996-ஆம் ஆண்டு தன்னுடைய 14-ஆம் வயதில் நேஷனல் கிரிகெட் மேட்ச்சில் விளையாடினார். இவர் தான் சிறிய வயதில் இன்டர்நேஷனல் மேட்ச் விளையாடிய கிரிக்கெட் வீரர் ஆவார்.