கேரளாவில் நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தன்னிடம் 14 கோடி ரூபாய் மோசடி செய்ததாக 2013இல் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஷர்மிளா என்ற பெண் புகார் அளித்திருந்தார்.. சர்மிளா என்பவர் பல்வேறு விதமான தொழில்களை செய்து வருகிறார்.. அவர் அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 14 கோடி ரூபாய் கொடுத்தேன். 3 கோடி மட்டுமே திருப்பி கொடுத்ததாகவும், மீதமுள்ள பணத்தை திருப்பிக் கொடுக்காமல் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.. ஷர்மிளா நெல்லை சரக டிஐஜியிடம் புகார் கொடுத்தார்.. அதனை தொடர்ந்து அமலாக்கத் துறையினரிடமும் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில்தான் கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகினார்.. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.. விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து வருகிறார்.. இந்த புகார் உண்மைதானா? இந்த புகாரில் சாராம்சம் என்ன? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.. 10: 30 மணியளவில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது..
சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருக்கிறது. தற்போது கேரளாவை சேர்ந்த சர்மிளா என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..