Categories
தேசிய செய்திகள்

“14 ஆவது துணை ஜனாதிபதி ஆக பதவியேற்ற ஜெகதீப் தன்கர்”… என்னென்ன அதிகாரம்…? முழு விவரம் இதோ..!!!!!!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை கூறிய நமது நாட்டில் துணை ஜனாதிபதி பதவி தான் நாட்டின் இரண்டாவது உயர்பதவி என்பதனால் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நாட்டின் 14 வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஆறாம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளரான மேற்கு வங்காள மாநில கவர்னராக பதவி வகித்து வந்த ராஜஸ்தான் ஹாட் இனத் தலைவர் ஜெகதீப்  தன்கர் களம் இறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் மார்க்கெட் ஆல்வா புது வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணபட்டது இதில் ஜெகதீப்  தன்கர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்கெட் ஆல்வாவை 346 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலமாக நாட்டில் 14வது துணைத்தலை ஜனாதிபதியாக ஜெகதீப்  தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் உடனடியாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர் 11 ஆம் தேதி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இந்த சூழலில் நேற்று காலையில் ஜெகதீப்  தங்கர்  ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி  மரியாதை செலுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து அவர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் கமிஷன் வழங்கிய சான்றிதழ் வாசிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து ஜெகதீப்  தன்கர் நாட்டில் 14வது துணை ஜனாதிபதியாக பதவி பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கிறது என்பது பற்றி காண்போம்.

*துணை ஜனாதிபதி பதவி நாட்டின் இரண்டாவது உயரிய பதவியாகும். மரணம், ராஜினாமா நீக்கம் போன்ற சூழலில் ஜனாதிபதி பதவி காலியாகின்ற போது புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகின்ற வரையில் துணை ஜனாதிபதி தான் தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்பார். மேலும் இந்த காலகட்டத்தில் ஜனாதிபதி பதவிக்கான அனைத்து அதிகாரங்கள் சலுகைகள் சம்பளம் அலவன்சுகள் உண்டு. ஆனால் அவர் மாநிலங்களவை தலைவராக பணியாற்றவோ அதற்கான சம்பளம் அலவன்சுகளையோ பெற முடியாது.

*துணை ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டு காலம் தான் என்றாலும் கூட பதவி காலம் முடிந்தாலும் புதிய துணை ஜனாதிபதி பதவி ஏற்கிற வரை இந்த பதவியை தொடரலாம்.

*துணை ஜனாதிபதி தான் மாநிலங்களவை தலைவர் என்ற வகையில் அந்த சபையை நடத்துவது தொடர்பான அனைத்து அதிகாரங்களும் அவருக்கு உண்டு

Categories

Tech |