சட்ட விரோதமாக மது பாக்கெட்டுகளை கடத்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அருகாமையில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிவேகமாக வந்த காரை காவல்துறையினர் மடக்கி சோதனை செய்ததில் கர்நாடக மாநிலத்திலிருந்து 1400 மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து கார் மற்றும் மது பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் காரை ஓட்டி வந்த தாமேலேரி முத்தூர்பகுதியில் வசிக்கும் வீரமணி என்பவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.