தொடர் கன மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது.
தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. இந்த அணையின் நீர்ப்படிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது . இதனால் அனைத்து நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நாளுக்கு நாள் நீர்மட்டம் உயர்த்துவதன்படி நேற்று மாலை 3 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 135.70 அடி ஆகவும், நீர் வரத்து 6143 கன அடி ஆகவும் இருந்தது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ஏற்று இரவு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. முல்லை பெரியார் ஆற்றின் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை அணையின் நீர்மட்டமானது 137.50 அடியாக நிலை நிறுத்திக் கொள்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.