கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134.64 கோடி வந்துள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர், ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஏப் 20க்கு பிறகான நடவடிக்கைகள் குறித்து நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என தெரிவித்துள்ளார். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134.64 கோடி வந்துள்ளது. நிதி வழங்கிய அனைவருக்கும் அரசு சார்பில் நன்றி தெரிவித்துள்ளார். அரசின் 138 குளிர்பதன கிடங்குகளை விவசாயிகள் இலவசமாக பயன்படுத்தலாம். அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், காற்கறிகளை நடமாடும் காய்கறி கடைகள் மூலம் வீட்டிற்கே சென்று வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நாள்தோறும் 4500 வாகனங்கள் மூலம் 2500 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகம் செய்யப்படுவதாகவும், விவசாயிகளின் விளைபொருட்கள் வீணாகாமல் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். காய்கறி விலையேற்றம் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு என விளக்கம் அளித்துள்ள அவர், கடந்த மாதத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது, போன மாதம் 20 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என கூறியுள்ளார்.