Categories
தேசிய செய்திகள்

நெகிழ்ச்சியான சம்பவம்… கல்யாணம் முடிந்தபின் புதுமணத் தம்பதி செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்..!!

திருமணத்தை முடித்த காதல் ஜோடிகள் 50 படுக்கைகளை இலவசமாக தனிமைப்படுத்தும்  முகாமிற்கு வழங்கியிருப்பது பாராட்டுகளை பெற்று வருகின்றது

மும்பையை சேர்ந்த எரிக் என்பவர் மெர்லின்  என்ற பெண்ணை 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணம் 2000 விருந்தினர்கள் சூழ பிரம்மாண்டமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா  தொற்று பரவி வரும் சூழலில் கொண்டாட்டங்கள், விழாக்கள், திருமணங்கள் என அனைத்தும் சாதாரணமாக நடத்தவே  அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மும்பையில் இருக்கும் வசாய் பகுதியில் வைத்து இந்தத் தம்பதிகள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் 22 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

திருமணத்தை முடித்த புதுமணத்தம்பதிகள் அதே பகுதியில் இருக்கும் சாட்பாலா கொரோனா தொற்று நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையத்திற்கு சென்று 50 படுக்கைகள், தலையணை மற்றும் அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போன்றவற்றை இலவசமாக கொடுத்துள்ளனர். இதுபற்றி மணமகன் எரிக் கூறுகையில் “திருமணத்திற்கு என்று சேர்த்துவைத்த பணத்தை சரியான முறையில் செலவழிக்க நினைத்தோம்.

தற்போது படுக்க  இடமில்லாமல் கொரோனா  தொற்றுநோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்  அதனைப் பூர்த்தி செய்வதற்கு சேமித்து வைத்த பணத்தை கொடுத்து  உதவினோம்” என தெரிவித்துள்ளார். ஈவென்ட் மேனேஜ்மென்ட் நடத்தி வரும் இருவரும் யாரிடமும் பரிசுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. மணப்பெண் புதிய ஆடை கூட வாங்காமல்  திருமணத்தின் போது அணியும் ஆடையை வாடகைக்கு  எடுத்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பிருந்தே தன்னார்வலர்களுடன் சேர்ந்து சமையலறை அமைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உணவு கொடுப்பது, அவர்களை அவர்களது சொந்த மாநிலத்தில் அனுப்பி வைப்பது போன்ற சேவைகளை செய்து வந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையை தொடங்கும் முன்பு இந்த சேவைகளை தொடர்ந்து செய்ய இருப்பதாக அந்த ஜோடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |