அமெரிக்காவில் காவல்துறையினரின் சோதனை வாகனத்தின் மீது 13 வயதுடைய ஒரு சிறுவன் வாகனத்தை மோதியதால், சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்க நாட்டில் இருக்கும் சாண்டியாகோ மாகாணத்தின் வார்கொல்ட் பகுதியில் வாகன திருட்டு நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகத்தில் ஒரு வாகனம் வந்திருக்கிறது.
எனவே, காவல் துறையினர் அதனை நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அதற்குள் அந்த வாகனம் அங்கு நின்று காவல்துறையினரின் சோதனை வாகனத்தின் மீது மோதியது. எனவே, காவல்துறையினர் அந்த வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
அதில், அந்த வாகனத்தை இயக்கி வந்த 13 வயதுடைய சிறுவன் பலியானார். அந்த வாகனத்தில் இருந்த சிறுவர்கள் இருவர் எந்த காயமும் ஏற்படாமல் உயிர் தப்பினார்கள். சிறுவன் இயக்கி வந்த அந்த வாகனம் திருடப்பட்டது என்று காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். மேலும் இது தொடர்பில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.