இந்தோனேசியாவில் இருக்கும் இஸ்லாமிய பள்ளி ஒன்றில் சிறுமிகள் 13 பேரை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தோனேசியாவில் இருக்கும் இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் ஹெர்ரி வைரவன், 13 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம் அதன் பிறகு மரண தண்டனை விதித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் கடந்த 2016ஆம் வருடத்திலிருந்து 2021 ஆம் வருடம் வரை 12 லிருந்து 16 வயது வரை உள்ள சிறுமிகள் 13 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 8 சிறுமிகள் கர்ப்பமானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடத்தில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்ட புகார்களில் 18 சம்பவங்களில் 14 சம்பவங்கள் இஸ்லாமிய உறைவிடப் பள்ளிகளில் நடந்திருக்கிறது.
அந்நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு மந்திரி போன்ற அதிகாரிகள் பலரும் வைரவனுக்கு மரண தண்டனை விதித்ததற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய பெரும்பான்மை நாடு இந்தோனேசியா. அங்கு ஆயிரக்கணக்கான இஸ்லாமிய உறைவிடப்பள்ளிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.