இடைதேர்தலில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 பேர் வரும் 28 -ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர்.
மக்களவை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 39 தொகுதிகளில் திமுக 38 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக 1 தொகுதி மட்டுமே வென்றது. இதையடுத்து ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 தி.மு.க எம்எல்ஏக்கள் வரும் 28 -ஆம் தேதி தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இதற்க்கு முன்னதாக தி.மு.கவுக்கு 88 எம்.எல்.ஏக்கள் இருந்த நிலையில் தற்போது 101 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.