அமெரிக்காவில் 13 வயது சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சியை காவல்துறையினர் வெளியிட்டுள்ளது.
சிகாகோவை சேர்ந்த ஆடம் டோலிடோ என்ற 13 வயது சிறுவன் கடந்த மார்ச் 29ஆம் தேதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவனுடைய கையில் துப்பாக்கி இருந்ததால் சுட்டதாக போலீசார் தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால் சிறுவனின் கையில் துப்பாக்கி இல்லை என்று அவரின் குடும்பத்தினர் கூறியுனர். இதனிடையே துப்பாக்கி சூடு நடத்திய காவல் அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளது.
https://twitter.com/ChicagoALOT/status/1382803746665738243
அதில் ஆடம் டோலிடோவை காவல் அதிகாரிகள் துரத்தில் செல்கின்றனர் . மேலும் அதிகாரி சிறுவனை நில் நில் என்று கூச்சலிட ஆடம் இரண்டு கைகளை மேலே உயர்த்தியவாறு நிற்கின்றான். ஆடமின் கையில் எதுவும் இல்லாத நிலையில் போலீஸ் அதிகாரி கீழே போடு என்று கூச்சலிட்டு தனது துப்பாக்கியால் சிறுவனை சுடுகின்றார் .உடனே சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து சிறுவன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தான்.மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்ட இன்னொரு சிசிடிவியில் சிறுவன் நின்று கையை உயர்த்துவதற்கு முன் துப்பாக்கியை தூக்கி வீசிய காட்சிகள் பதிவாகியுள்ளது.
மேலும் சிறுவனுடன் இருந்த 21 வயதான இளைஞர் ரூபன் என்பவர் அவ்வழியே சென்ற கார் மீது துப்பாக்கியால் சுட்டதாக சம்பவம் குறித்து வழக்கறிஞர் கூறியுள்ளார் .இதற்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜரான ரூபன் மீது ஆயுதத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியதற்காகவும் துப்பாக்கி சூடு நடத்தியதற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .