13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 34 வருட சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் கட்டிட தொழிலாளி. இவர் சென்ற 2020 ஆம் வருடம் அக்டோபர் 27ஆம் தேதி அன்று 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியிருக்கின்றார்.
இதன் பின் சிறுமியின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றார். அதன் பேரில் போலீசார் போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெயகிருஷ்ணனை கைது செய்தார்கள். இந்த வழக்கானது நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜெய் கிருஷ்ணனுக்கு 34 வருட சிறை தண்டனையும் ரூபாய் 4000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.