மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தனது பக்கத்து வீட்டிற்கு அடிக்கடி விளையாட செல்வான். இந்நிலையில் வழக்கம் போல அந்த சிறுவன் கடந்த 13ம் தேதி பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் 13 வயது சிறுமியை தவிர வேறு யாருமில்லை. அதனால் அந்த சிறுவன் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும் இதை வெளியே சொன்னால் உனது பெற்றோரை கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
அதன் பிறகு வீட்டிற்கு வந்த தனது பெற்றோரிடம் அந்த சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிறுவனைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.