Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமிக்கு செய்த கொடுமை… அவங்களுக்கு இந்த தண்டனை குடுங்க… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல் அருகே 13 வயது சிறுமியை தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.கல்லுப்பட்டி பகுதியில் குருநாதன் (60) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் தங்கவேல் (38), பெருமாள் (58) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி 13 வயது சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக வடமதுரை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் குருநாதன் உள்பட 3 பேரையும் கைது செய்ய அனுமதிக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் மூன்று பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |