மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நம் நாட்டில் கொரோனவால் ஒரு மில்லியனுக்கு 112 பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஒரு மாதத்திற்கு இந்த இறப்பு சதவீதம் என்பது உலக அளவில் மிகவும் குறைவான ஒன்று. கடந்த பத்து வருடங்களில் இந்த பட்ஜெட் என்பது புதிய ஒன்றாக இருக்கிறது. உங்கள் அனைவரின் உதவியோடு டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.கொரோனா தாக்கம் என்பது உலக அளவில் சிக்கல்களையும் ஏற்படுத்தும் ஒன்று என்பதால் நம் நாட்டில் மட்டுமல்லாது உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள மாற்றமும் நம்மை பாதித்துள்ளது.
2020 முதல் 21 மிக முக்கியமான காலகட்டம். நம் நாடு சுதந்திரம் அடைந்த 75ஆவது ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போர் நடந்து 50 வருடம் நிறைவடைந்த ஆண்டு இது. இந்த ஆண்டில் சந்திரயான் 3 என்ற திட்டத்தையும் செயல்படுத்த இருக்கின்றோம். இதுபோன்ற பல சிறப்புகளை இந்த ஆண்டு பெற்றுள்ளது. அனைவரது கவனத்தையும் நான் இதில் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறேன்.
நம் நாடு மிகப் பெரிய சோதனைகளை இந்த வருடம் கடந்து வந்துள்ளது. இந்தியாவின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் நான் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆத்ம நிற்பன் திட்டம் பற்றிய விரிவான தகவலை இப்போது தெரிவிக்கப் போகிறேன். பழங்கால இந்தியா என்பது உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நாடாக இருந்தது. நாம் ஜி20 பிரிக்ஸ் போன்ற சர்வதேச அளவிலான அமைப்புகளில் முக்கிய அங்கம் வசிக்கிறோம்.
நாம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறோம். இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள், பெண்களுக்கு முன்னேற்றம் ஏற்படுத்துவது போன்ற திட்டங்களை அறிவிக்கப் போகிறோம். அதேபோல முக்கிய பதிமூன்று வாக்குறுதிகளை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியோடு இருக்கின்றோம். இந்த ஆண்டு பட்ஜெட் என்பது ஆறு முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. நம் முதலீடுகளை கட்டமைப்புகளை உறுதிப்படுத்தும் பட்ஜெட்டாக இது அமைய உள்ளது. நம் மனிதவள மேம்பாட்டை உயர்த்தும் பட்ஜெட்டாக இருக்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.