டெல்லியில் மது விற்பனை செய்யும் 125 கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன.
டெல்லியில் பீர் மற்றும் ஒயின் மது வகைகளை விற்பனை செய்வதற்காக மட்டும் உரிமம் பெற்ற கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் அங்கு முறைகேடுகள் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்ட 125 மதுபானக் கடைகள் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட 125 மது கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றது.