புத்தகங்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் வட்டார கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வட்டார கல்வி அலுவலராக மாதம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்திற்கு கடந்த 2021-ஆம் ஆண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் வந்தது. அதில் மொத்தம் 29,265 புத்தகங்கள் வந்த நிலையில், 17,265 புத்தகங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசு பள்ளிகளில் ஒப்படைக்கப்பட்டது. இதில் மீதமுள்ள 12,000 புத்தகங்களும் அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது.
இங்கு இளநிலை உதவியாளராக திருநாவுக்கரசும், பதிவேடு அறை எழுத்தாளராக தங்கராசு என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மாதம்மாள் அலுவலகத்தில் உள்ள புத்தகங்களை ஆய்வு செய்த போது 12,000 புத்தகங்கள் மாயமாகி இருந்தது. அதன் மொத்த மதிப்பு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகும். இது தொடர்பாக மாதம்மாள் ஊத்தங்கரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருநாவுக்கரசு மற்றும் தங்கவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.