புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறியுள்ளது. நிவர் புயல் கரையை கடக்கும்போது நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 120 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மூன்று மணி நேரமாக எங்கும் நகராமல் சென்னையிலிருந்து 450 கிமீ தூரத்திலும், புதுவையிலிருந்து 410 கிமீ தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது. உயர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றார்.