சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4000-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி உரிமம் பெறவும், தொழில் வரி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அதனை மீறி வரி செலுத்தாத கடைகளை மூடி சீல் வைக்குமாறு சென்னை மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி அதிரடியாக உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் படி ராயபுரம் மண்டல உதவி வருவாய் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் சென்னை பூக்கடை நைனியப்பன் தெரு, தங்கசாலை தெரு, அண்ணா சாலை, திருச்சி தெரு ஆகிய பகுதிகளில் வரி செலுத்தாமல் செயல்பட்ட 120 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதேபோல் தொழில் உரிமம் பெறாமல், வரி செலுத்தாமல் இருக்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.