Categories
உலக செய்திகள்

“12 ஆண்டுகளுக்கு முன்” … 2020-ல் கொரானா; குறித்து எச்சரித்த புத்தகம்..! இணையத்தில் வைரலாகும் வரிகள்.!!

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவியுள்ளது.

தற்போது வரை சீனாவில்  கொரானா வைரசால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,070-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  80,651-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு சில்வியா வெளியிட்ட புத்தகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘என்ட் ஆஃப் டேஸ் என்ற புத்தகத்தில் 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசமான வைரஸ் பாதிப்பு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதில் 2020ஆம் ஆண்டில் கடுமையான நிமோனியா போன்ற நோய் உலகம் முழுவதும் பரவி நுரையீரல் மற்றும் மூச்சுக்குழல் குழாய்களை தாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த மருத்துவர்களால் கூட இந்த நோயை கட்டுப்படுத்த முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரிகள் தற்போது இணையத்தில் வைரலாக  பரவிவருகிறது.

இருப்பினும் இந்த புத்தகத்தில் கொரானா பற்றி   குறிப்பிடாமல் இருந்தாலும், உலகம் எதிர்கொள்ளும் தாக்கம் 12 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ளது  அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Categories

Tech |