Categories
உலக செய்திகள்

“விளையாடும் நேரத்தில்” வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு…. பாடம் நடத்தும் 12 வயது சிறுமி…. குவியும் பாராட்டு…!!

சிறுமி ஒருவர் வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு பாடம்கற்பிக்கும் கற்பிக்கும் சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது எகிப்து தலைநகரை சேர்ந்தவர் ரீம் எல் கவ்லி(12). சிறுமியான இவர் தற்போது ஆசிரியராக மாறியுள்ளார். வீடு வீடாக சென்று 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார். சிறுமியினுடைய இந்த முயற்சி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனால் இவருடைய இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் அதிகமான பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது குறித்து அவர் கூறுகையில், “தெருக்களில் விளையாடுவதற்கு பதில் பாடம் கற்றுக் கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன்.

அதன்படி காலை எழுந்து பிரார்த்தனையை முடித்துவிட்டு அவர்களுக்கு வகுப்பு எடுக்க தொடங்கினேன். ஆங்கிலம், அரபு, கணக்கு பாடங்களை குழந்தைகளுக்கு முதலில் நோட்புக் மூலம் கற்று கொடுத்தேன். தற்போது கரும்பலகை மூலம் எடுத்து வருகிறேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து கேள்விப்பட்ட உள்ளூர் தொண்டுநிறுவனம் ஒன்று அவருக்கு படம் கற்பிப்பதற்கான  தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இந்த சேவை உலகில் உள்ள பிரபல ஊடகங்கள் நாளிதழில் வெளியாகி அவரை பிரபலம் அடைய செய்துள்ளது. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை இந்த சிறுமிக்கு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |