Categories
உலக செய்திகள்

லண்டனில் 12 வயது சிறுமி மாயம்.. வெளியான புகைப்படம்.. பொது மக்களிடம் கோரிக்கை..!!

லண்டனில் வசிக்கும் 12 வயது சிறுமி மாயமானது தொடர்பில் காவல்துறையினர் தகவல் வெளியிட்டிருக்கிறார்கள்.

லண்டனில் உள்ள Slough என்ற பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமியான லிலனா ஹென்றி, நேற்று முன்தினம் காணாமல் போனார். தற்போது வரை அவர் எங்கிருக்கிறார்? என்ற தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுமியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.

இச்சிறுமி நேற்று முன்தினம் மாலையில் Slough என்ற பகுதியில் மாயமாகியிருக்கிறார். மேலும், சுட்டன் பகுதியில், அவர் அடிக்கடி தென்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, அவரை யாராவது  பார்த்திருந்தால், தங்களிடம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |