கேரள மாநிலத்தில் 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பத்தினம்திட்டா பகுதியில் 12-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகி இருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த 12 பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் நரபலி சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட நிலையில், ஒரு பெண்ணின் உடம்பை 60 துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட அதே பகுதியில் 12 பெண்கள் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 12 பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.