பிரான்சில் 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் சுகாதார பாஸ் இருந்தால் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க படுவார்கள் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
உலக நாடுகளில் ஒன்றான ஐரோப்பியாவில் பெரும்பாலான வயதானோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி விட்டனர். இதனைத் தொடர்ந்து நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறுகின்றது. மேலும் தற்போது பிரான்சில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று முதல் 12 வயதுக்கு மேல் சுகாதார பாஸ் (pass sanitaire) கட்டாயம் என அரசு கூறியுள்ளது. குறிப்பாக தேநீர் விடுதிகள், உணவகங்கள், திரையரங்கம், விளையாட்டு அரங்கம் போன்ற பொது இடங்களுக்குச் செல்ல 12 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு சுகாதார பாஸ் கட்டாயம். இருப்பினும் பள்ளிகளுக்கு சுகாதாரம் பாஸ் அவசியம் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.
ஏனென்றால் 12-17 வயது வரை உள்ளவர்கள் 10க்கு 6 பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுள்ளனர். மேலும் 1.4 மில்லியன் பேர் இந்த வயது வரம்புக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததே காரணமாகும். மேலும் சுகாதார பாஸ் இல்லாத நபர்களுக்கு தண்டனை ஏதும் அறிவிக்கவில்லை. குறிப்பாக இந்த அறிவிப்பை முழுமையாக கடைபிடிக்காவிட்டால் தடுப்பூசி கட்டாயம் போடுவதற்கு அறிவிப்புகள் வழங்க வாய்ப்புள்ளது.