பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் கடும் புயல் மற்றும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள Khyber Pakhtunkhwa என்னும் மாகாணத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குடியிருப்புகளின் கூரைகள் இடிந்து விழுந்து குழந்தைகள் பெண்கள் உட்பட 12 நபர்கள் பரிதாபமாக பலியாகினர்.
மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இடிபாடுகள் மற்றும் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.