நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் :
மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழும் நாளாக இருக்கும். கூட பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி செல்லும். பணவரவு தாராளமாக இருக்கும். பிறரிடம் நீங்கள் ஒப்படைத்த பொறுப்புகள் சிறப்பாக நடைபெற்று உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் ஏற்படும். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாகவே கொஞ்சம் இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.
அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை மட்டும் தவிர்ப்பது நல்லது. எது செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் யோசனை செய்து செய்யுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைய கூடும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது அல்லது முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிற கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்டமான எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்
ரிஷபம் :
ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்று பூமி வாங்கும் யோகம் கிட்டும். புதிய பாதை புலப்படும். உங்களுடைய தாய்வழி மூலம் ஆதரவும் உண்டாகும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொழில் ரீதியாக நீங்கள் எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வார்கள். இன்று தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு சூழ்நிலைகள் ஏதுவாக இருப்பதால் நீங்கள் எந்த முயற்சியும் மேற்கொண்டாலும் வெற்றி கிடைக்கும். செலவைக் குறைப்பதன் மூலம் பணத்தட்டுப்பாடு குறையும் பார்த்துக்கொள்ளுங்கள். பேச்சில் கடுமை காட்டாமல் இருப்பது நன்மை கொடுக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிபுரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். அதேபோலவே குறிப்பாக இயந்திரங்களை இயக்கும் போது கவனமாக இயக்குங்கள். தீ போன்றவற்றை கையாளும் பொழுது கவனமாக கையாளுங்கள். இன்று நாள் ஓரளவு சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது இளம் ஊதா நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை வைத்துக்கொண்டால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். வெற்றியும் கிடைக்கும். அதுபோல காலையில் எழுந்ததும் மனதார விஷ்ணு பகவானை நினைத்து வழிபட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் இளம் பச்சை நிறம்
மிதுனம் :
மிதுனம் ராசி அன்பர்களே…!! இன்று ஆலய வழிபாட்டால் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கும். வசதிகள் பிறக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தபால் வழி தகவல்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மை கொடுக்கும். கூடுதலாகவே இன்று உழைக்க வேண்டியது இருக்கும். உங்களது வேலையை மற்றவர்கள் கண்டு பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
செல்வ நிலை உயரும். வாழ்க்கை துணையை ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். பெண்களுக்கு வீண் பேச்சுக்களை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை கொடுக்கும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பு கொடுக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். நீங்கள் வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்
கடகம் :
கடகம் ராசி அன்பர்களே…!! இன்று தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். திடீர் பண வரவு உண்டாகும். திருமண தடைகள் அகலும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இன்று எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்க நேரிடும். சாதுர்யமான பேச்சு மூலம் காரிய வெற்றி ஏற்படும். திடீர் உடல்நலக் கோளாறு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள்.
தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கப் பெறுவார்கள். இன்றைய நாள் நீங்கள் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்று நாளை தொடங்கினால் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்
சிம்மம் :
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள் ஆக இருக்கும். சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்களின் சந்திப்பு கிடைக்கும். நண்பர்களால் விரயம் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் சிந்தனை மேலோங்கும். இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை சின்னதாக வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பண விஷயத்தில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தெய்வீக அனுக்கிரகம் இருப்பதால் நல்ல பலன்களையே நீங்கள் பெறுவீர்கள்.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுகிறார்கள். இன்று ஓரளவு சிறப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர்ந்து நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள். அதுபோலவே நீங்கள் இன்று காலையில் எழுந்ததும் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நல்ல முன்னேற்றமான சூழ்நிலைகளை சந்திக்கக்கூடும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்
கன்னி :
கன்னி ராசி அன்பர்களே…!! இன்று தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொருளாதார நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று குடும்பத்தில் திருமண சுப பலன்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே பந்த பாசம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மனம் மகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உறவினர்களுடன் கவனமாக பேசுவது நல்லது.
மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் தாமதமாக தான் நடக்கும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளியில் செல்லும்பொழுது பச்சைநிற ஆடை அல்லது பச்சை நிற கைக்குட்டை எடுத்துச் சொல்லுங்கள். அனைத்துக்கும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்
துலாம் :
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று சுபகாரியம் ஏற்படும் நாளாக இருக்கும். துணிவும் தன்னம்பிக்கையும் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஆர்வத்தோடு செயலாற்றுவீர்கள். மற்றவர்கள் நலன் கருதி எடுத்த முயற்சிக்கு ஆதாயம் கூடுதலாகவே கிடைக்கும். இன்று செலவு கொஞ்சம் கூடும். சாதகமான பலன்கள் உங்களை தேடி வரக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் மட்டும் திடீர் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். முன் கோபம் ஏற்படக் கூடும் அதை பார்த்துக் கொள்ளுங்கள்.
வீண் தகராறு ஏற்படும். பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை கொடுக்கும். கூடுமானவரை ரகசியத்தை பேணிக்காப்பது மிகவும் நல்லது. இன்று நீங்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிற கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். முயற்சியை கொடுப்பதாக இருக்கும். அதே போல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
விருச்சிகம் :
விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று வருமானம் திருப்தி தரும் நாளாக இருக்கும். நீங்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். அஸ்திவாரத்தில் நின்ற பணியை மீண்டும் தொடங்குவீர்கள். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். கூடுதலாகவே இன்று நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும்.
வேலை தொடர்பான வீண் அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை தயவுசெய்து அனுசரித்துச் செல்லுங்கள். பேசும் போது அவர்களிடம் கடுமையான வார்த்தைகளை ஏதும் கொட்டாதீர்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிற கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் இன்று சிறப்பான நாளாக இருக்கும். அம்மனை மனதார நினைத்து வழிபட்டு தொடங்கினால் வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்
தனுசு :
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று நட்பால் நன்மை கிட்டும் நாளாக இருக்கும். நல்ல சந்தர்ப்பங்கள் உங்களை தேடி வரக்கூடும். அடுத்தவர்கள் நலனில் அக்கறை காட்டியதற்கு ஆதாயம் இன்று கிடைக்கும். மறதியால் விட்டுப்போன பணிகளை செய்து முடிப்பீர்கள். பயணம் நல்ல பலனைக் கொடுக்கும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். எந்த ஒரு காரியத்திலும் அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது. பொறுமையாக செயல்படுங்கள். பதட்டத்தை தயவு செய்து குறைத்துக் கொள்ளுங்கள். நிதானமாக இருந்தால் அனைத்தும் வெற்றியாகவே இருக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது நீல நிறத்தில் ஆடையோ அல்லது நீல நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் சென்றால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் அம்மன் வழிபாட்டுடன் இன்று நாளை தொடங்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்
மகரம் :
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். அலைபேசி வழி தகவலால் ஆதாயம் உண்டாகும். வரன்கள் வந்து வாயில் கதவை தட்டும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். இன்று மன தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி செல்லும். மனதில் நம்பிக்கை உண்டாகும். உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளை நீங்கள் பெறக்கூடும். எதிலுமே கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.
அதேபோல நண்பர்களால் உங்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து சேரும். ஆகையால் நண்பரிடம் பேசும் பொழுது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். முடிந்தால் காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்
கும்பம் :
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்களை செயலாக்க யாரேனும் ஒருவரின் ஒத்துழைப்பு உங்களுக்கு தேவைப்படும். அலைச்சல் கூடும். விரயங்கள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்துவிட்டால் இன்றைய நாள் உங்களுடைய வசம் வந்துவிடும். எதிலும் நிதானமாக செயல்படுங்கள். இன்று திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப் படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூக நிலை நீடிக்கும். உல்லாசப் பயணங்கள் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும்.
கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது. இன்று பொறுமை மட்டும் இழந்து விடாதீர்கள். இன்றைய நாள் நீங்கள் கலகலப்பாகவே காணப்படுவீர்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே முடிந்தால் காலையில் எழுந்ததும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்
மீனம் :
மீனம் ராசி அன்பர்களே…!! இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இருக்கும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளியை சந்திக்கக்கூடும். வருமானம் போதுமானதாக இருக்கும். எதையுமே சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். இன்று மனை, வீடு வாங்குவதற்கு எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாகவே நடக்கும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நன்மையை கொடுக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைப்பட்ட பணவரவு தடை நீங்கி கைக்கு வந்து சேரும். குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
தந்தை வழியில் இருந்துவந்த பிரச்சனைகளும் சரியாகும். இன்று ஓரளவு வெற்றி வாய்ப்புகளை நீங்கள் குவிப்பீர்கள். இருந்தாலும் பேசும்பொழுது மனதை நீங்கள் அமைதியாக வைத்திருந்தால் போதும். கோபம் தலை தூக்காமல் இருக்கும். இன்றைய நாள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது கவனமாக பேசுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடையை அணிந்து செல்லுங்கள். அனைத்து விதமான வெற்றியும் கிடைக்கும். இல்லையேல் வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டு வாருங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாகவே அமையும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்