பேருந்து நிலையத்தில் இருந்த கட்சிக் கொடி கம்பத்தில் தமிழ்நாடு கொடியை ஏற்றியதால் 12 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி கொடி கம்பம் அமைந்திருகிறது. இந்நிலையில் இந்த கொடி கம்பத்தை ஓதியத்தூர் கிராமத்தில் வசிக்கும் டோமிக்ராஜா தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் தமிழ்நாடு கொடியை திடீரென ஏற்றியுள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாம் தமிழர் கட்சி கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த தமிழ்நாடு கொடியை இறக்கி உள்ளனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ரவி கொடுத்த புகாரின் பேரில் 12 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.