Categories
சினிமா தமிழ் சினிமா

12 வருடங்களுக்கு பிறகு தந்தையான நடிகர் நரேனின் மகனை பார்த்துள்ளீர்களா…? இதோ அந்த அழகிய புகைப்படம்….!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் நரேன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து பாராட்டுகளை பெற்றிருந்தார். அதன்பிறகு தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நரேன் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் நரேன் பிரபல மலையாள தொகுப்பாளினி மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், 14 வயதில் தன்மையா என்ற மகள் இருக்கிறார்.

கடந்த 12 வருடங்களுக்குப் பிறகு கடந்த மாதம் நடிகர் நரேன் தனக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருப்பதாக சமூக வலைதளத்தில் அறிவித்தார். இந்நிலையில் நடிகர் நரேன் தற்போது தன்னுடைய மகனுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தி அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் பிறகு நடிகர் நரேன் தன்னுடைய மகனுக்கு ஓம்கார் நரேன் என்று பெயர் வைத்துள்ளார். மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் நடிகர் நரேனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |