Categories
மாநில செய்திகள்

12 வயது சிறுமி… பிரியாணிக்காக தற்கொலை… தமிழகத்தில் தொடரும் அவலம்…!!!

சென்னை அருகே 12 வயது சிறுமி தாய் பிரியாணி செய்து தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை, கொலை, தற்கொலை என்று மக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ந்து வருகிறது.

அதன்படி சென்னை அருகே குன்றத்தூர் பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமி தனது தாயிடம் புத்தாண்டு அன்று பிரியாணி செய்து தர கேட்டுள்ளார். ஆனால் அதற்கு தாயார் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்ன விஷயங்களுக்கு கூட தற்கொலை செய்து கொள்ளும் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.

Categories

Tech |