சவுதி அரேபியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளும் கொரோனா காரணமாக பல இன்னல்களை சந்தித்துள்ளது. மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாக பெரிய இழப்பீடுகளை சந்தித்துள்ளது. பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தற்போது சவுதி அரேபியாவில் 12 முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நாட்டு சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நாட்டில் 18 வயதிற்கு மேலுள்ள 25% பேருக்கு மேல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே தற்போது 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.