Categories
தேசிய செய்திகள்

12 வயதில் பாலியல் பலாத்காரம்…. அடுத்த வருடமே குழந்தை…. 30 வருடங்களுக்குப் பின்பு புகார்…. இப்படி ஒரு சம்பவமா….????

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 12 வயது சிறுமி ஒருவர் முப்பது வருடங்களுக்கு முன்பு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அதனால் கருவுற்ற சிறுமி கருக்கலைப்பு செய்தால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறியதால் வேறு வழியின்றி குழந்தையை பெற்றுள்ளார். அவர் பெற்றெடுத்த குழந்தை உறவினர்களிடம் வளர்ந்து வந்த நிலையில் அந்த சிறுமிக்கு 18 வயதான போது திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த சம்பவம் கணவருக்கு தெரிய வந்ததால் அவர் விவாகரத்து செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அந்தப் பெண் பாலியல் வன்கொடுமையால் பிறந்த தனது மகனை சந்தித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 30 வருடங்களுக்கு பின்னர் நீதிமன்றத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் அதில் ஒருவரின் டிஎன்ஏ மற்றும் அந்த பெண்ணின் மகனின் டிஎன்ஏ சோதனை செய்ததில் ஒரே மாதிரியாக இருப்பது உறுதியானது. எனவே இதை தொடர்ந்து விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |