12-ம் வகுப்பு மாணவியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக ஓட்டுநருக்கு 25 வருடம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
வேலூர் மாவட்டம், செந்துறை தாலுகா சித்துடையார் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜதுரை(21). இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சுமார் இரண்டு வருடங்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் வருடம் மார்ச் 9ஆம் தேதி அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை பேசி ராஜதுரை கடத்தி சென்றுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கடந்த 2021 ஆம் வருடம் மார்ச் 10ஆம் தேதி அன்று அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜதுரையினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு அரியலூர் மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவில் நேற்று நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பின் மாணவியை பலாத்காரம் செய்தற்கு 25 வருடங்கள் சிறை தண்டனையும், ரூ 10,000 அபராதமும், கடத்தி சென்றதற்கு 10 வருடம் சிறை தண்டனையும், ரூ 10,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஒரு வருடம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் அந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டதால் ராஜதுரைக்கு மொத்தம் 25 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ராஜதுரை பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைப்பதற்கு காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.