Categories
தேசிய செய்திகள்

“12 ம் வகுப்பு மாணவனால் ஆசிரியை 5 மாத கர்ப்பம்”….. பயத்தில் மாணவன் செய்த கொடூர சம்பவம்….!!!!

வீட்டில் தனியாக இருந்த ஆசிரியரை மாணவன் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை திருமணமாகி தனது கணவர் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார். அவருடைய கணவரும் ஒரு பள்ளி ஆசிரியர். ஆசிரியைக்கு அயோத்தி மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த மாணவனுடன் ஆசிரியருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனால் அந்த ஆசிரியை 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

இதை கேள்விப்பட்ட அதிர்ச்சி அடைந்த மாணவன் தங்கள் உறவை முறித்துக் கொள்ள விரும்பினார். ஆனால் ஆசிரியை அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். அதன்பின் ஒரு நாள் தனது வீட்டில் தனியாக இருந்த ஆசிரியையை கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக பலமுறை குத்தி கொலை செய்துவிட்டு மாணவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதை திருட்டு வழக்காக சித்தரிக்கும் முயற்சி செய்த மாணவன் அவர்கள் வீட்டில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்து 50,000 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஆசிரியையை கொலை செய்த 12ம் வகுப்பு மாணவனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |