தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த வருடம் 26 லட்சத்து 76 ஆயிரத்து 675 பேர் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களுக்கான தேர்வுகள் இன்று நிறைவடைய உள்ள நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.