Categories
மாநில செய்திகள்

12ஆம் வகுப்பு மாணவர்களே ரெடியா இருங்க…. இன்று காலை 11 மணிக்கு…. முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதனால் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் மதிப்பெண்கள் குறைவாக வந்ததாக கருதும் மாணவர்கள் தேர்வுகளை எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி துணைத்தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் இணையத்தளம் மூலம் விண்ணப்பித்து துணை தேர்வு எழுதினர். கடந்த மாதம் ஆறாம் தேதி முதல் 19ம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு துணை தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலை இன்று காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நேரில் பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள் நகல் உக்கு ஒரு பாடத்திற்கு தலா 275 ரூபாய். மறு கூட்டலுக்கு, உயிரியல் பாடத்திற்கு 305 ரூபாய், மற்ற பாடங்களுக்கு தலா 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |