Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்காக 112 நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் சென்னைக்கு வரவழைப்பு… !!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 112 நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில், நேற்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் தினசரி பாதிப்புக்குள்ளாகும் கொரோனா நோயாளிகளை இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் வசதி போதிய அளவு இல்லை. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த வாகனத்தில் மருத்துவ உபகரணங்கள், மருத்துவர், செவிலியர், ஓட்டுநர் ஆகியோர் இருப்பார்கள். தமிழகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வர 179 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டன.

சென்னையில் மட்டும் 80 ஆம்புலன்ஸ் சேவைகள் இருந்து வந்தன. இந்த நிலையில், கடந்த 10நாட்களுக்கும் மேலாக சென்னையில் கொரோனா பாதிப்பு 1,000த்தை கடந்து வருவதால் மேலும் 112 நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது சென்னை மாநகராட்சி வந்துள்ள இந்த வாகனங்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |