பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயல் பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை 112 ஆக அதிகரித்திருக்கிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயல் உருவாகி, அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மணிநேரத்திற்கு சுமார் 121 கிலோ மீட்டரிலிருந்து 168 கிலோ மீட்டர் வரை சூறாவளி காற்று பலமாக வீசுகிறது. எனவே, இப்புயல் சமீபத்திய வருடங்களில் அந்நாட்டை தாக்கிய மிக பயங்கரமான புயலாக பார்க்கப்படுகிறது.
2 நாட்களாக தொடர்ந்து ராய் புயல் வீசியதில், மரங்கள் நூற்றுக்கணக்கில் வேரோடு சாய்ந்திருக்கிறது. மின் கம்பங்கள் சரிந்ததோடு, குடியிருப்பின் மேற்கூரைகள் பறந்தது. மேலும் கடலும் கடுமையாக கொந்தளித்துள்ளது. கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகளும் புயலில் அடித்துச் செல்லப்பட்டது.
புயல் வீசிய பின்பு, கனத்த மழை பலமாகப் பெய்ததில், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கிறது. மேலும் கால்நடைகளும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. போக்குவரத்து மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 200க்கும் அதிகமான நகர்களில் மின் விநியோகம் தடையானது. தகவல்தொடர்பு சேவைகளும் முடங்கியது. மேலும் விவசாயிகளின் பயிர்கள் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சேதமடைந்திருக்கிறது. மேலும் புயல், வெள்ளத்தில் சிக்கி, 112 பேர் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.