வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 11 லட்ச ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் வங்கியின் மினி வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அதில் உரிய ஆவணங்களின்றி 11 லட்ச ரூபாய் கொண்டு சென்றது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.