Categories
உலக செய்திகள்

“ச்ச! என்ன மனுஷன்யா”… கேலிக்குள்ளான மாற்றுத்திறனாளி சிறுமி…. வியக்கவைத்த அதிபரின் செயல்…!!!

வடக்கு மாசிடோனியாவின் அதிபர், டவுன் சிண்ட்ரோமால் பாதிப்படைந்து கேலிக்குவுள்ளான சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வடக்கு மாசிடோனியாவை என்ற தென்கிழக்கு ஐரோப்பிய நாட்டின் அதிபர் ஒரு சிறுமியை பள்ளிக்கு அழைத்து சென்ற புகைப்படம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எம்ப்லா அடெமி என்ற 11 வயது சிறுமி, டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அச்சிறுமியை பள்ளியில் பயிலும் பிற மாணவர்கள் கேலி செய்திருக்கிறார்கள்.

அது தவறு என்பதை மாணவர்களுக்கு உணர வைப்பதற்காக, அந்நாட்டின் அதிபரான ஸ்டீவோ பெண்டாரோவ்ஸ்கி அச்சிறுமியை கையைப் பிடித்து தானே பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அதிபர், மாற்றுத்திறனாளிகளுக்கும் சாதாரண மனிதர்களைப் போன்று எல்லா உரிமைகளும் இருக்கிறது.

அதனை உறுதிப்படுத்துவது நம் கடமை என்று தெரிவித்துள்ளார். அவர்களை மாற்றுத்திறனாளி என்று ஒதுக்குவது மிகப் பெரிய தவறு. சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் அந்த பொறுப்பு உண்டு என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |