Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ”11 இலட்சம் பேர் பாதிப்பு” நடுங்கிய உலக நாடுகள் …!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது. 

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.

China Orders Centralized Response to Virus Outbreak as Alert Level ...

தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உலகளவில் மக்கள் அச்ச உணர்வுடன் இருந்து வருகின்றார்கள். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,100,887 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 58,752 பேர் உயிரிழந்துள்ளனர். 228,039 பேர் குணமடைந்த நிலையில் 807,096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 39,403 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Hong Kong scientists claim to develop Coronavirus vaccine

இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 273,777 பேர் பாதிக்கப்பட்டு 7,028 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 119,827 பேர் பாதிக்கப்பட்டு 14,681 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 119,199 பேர் பாதிக்கப்பட்டு 11,198 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியில் 91,159 பேர் பாதிக்கப்பட்டு 1,275 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 81,620 பேர் பாதிக்கப்பட்டு 3,322 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் 64,338 பேர் பாதிக்கப்பட்டு 6,507 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |