இந்தியாவில் பரவிவரும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்ப்பூரில் பூஜை ஒன்றை நடத்தினார்.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு மாநிலங்களும் கடுமையாக எச்சரித்துள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா பரவலை தடுப்பதற்காக கோரக்ப்பூரில் பூஜை ஒன்றை நடத்தினார். அந்த பூஜைக்கு பெயர் ருத்ராபிஷேக பூஜை. கோரக்ப்பூரில் நடைபெற்ற இந்த பூஜையில் லிங்கத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு பால் ஊற்றி வழிபாடு செய்தார். 11 லிட்டர் பாலை ஊற்றி செய்யப்படும் இந்த பூஜையால் கொரோனா இனி நிச்சயம் குறையும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.