Categories
உலக செய்திகள்

“11 பேரை அலேக்கா தூக்கிய போலீஸ்!”….. 2 வருட சோதனைக்கு கிடைத்த பலன்….!!

ஸ்பெயினில் ஹெலிகாப்டர் மூலமாக போதை பொருள் கடத்தியதாக 11 நபர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

ஸ்பெயினில் காவல்துறையினர் இரண்டு வருடங்களுக்கு மேலாக ரகசியமாக சோதனை மேற்கொண்டு வந்தனர். தற்போது அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. ஹஷிஸ் போதைப்பொருள், கஞ்சா போன்றவற்றை ஹெலிகாப்டர், ட்ரக் மற்றும் வாகனங்களில் கடத்தல் கும்பல் கொண்டு வந்ததாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.

மேலும், அவர்கள் ஸ்பெயின் நாட்டிலிருந்து போதை பொருட்களை, பிரான்ஸ் நாட்டிற்கு கடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர். அப்போது, ஹெலிகாப்டர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், கடத்தலில் ஈடுபட்ட 9 நபர்களை பிரான்சில் தேடி வருவதாகவும் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |