தமிழகம் முழுவதும் மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தொழில்கல்வி பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. ஏராளமான மாணவர்கள் இந்த தொழிற்கல்வி பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிலிருந்து 11 ஆம் வகுப்புகளுக்கு தொழிற்பாடப்பிரிவு நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் இந்த பிரிவில் பாடம் கற்பித்து வரும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்று விட்டதால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
மேலும் இதில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் தொழில் புதிய பாடப்பிரிவு மூடப்படுவதாக தெரிவித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய் என்று கூறியுள்ளார். இது குறித்து பரவி வந்த வதந்தியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.