அமெரிக்காவின் உடல்நலம் சரி இல்லாத 11 வயது மகளை கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றி காவல்துறை அதிகாரி மார் லியோன் கூறும்போது, “இது மிகவும் மோசமான சம்பவம். 11 வயது மகளை அவர் தந்தை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த நேரத்தில் சிறுமியின் தாய் சமையலறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த சிறுமிக்கு சில நாட்களாக தொடை பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் வருகின்ற 28 ஆம் தேதியன்று அந்த சிறுமியின் ஒரு காலை வெட்டி எடுக்கும் அறுவை சிகிச்சையை செய்வதற்கு மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர். அந்த நாள்தான் சிறுமியின் பெற்றோருக்கு திருமணநாள். சிறுமிக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை அறிந்த பெற்றோர் மிகுந்த வேதனையிலும், சோகத்திலும் இருந்திருக்கின்றனர். இந்த நிலையில் சிறுமியின் தந்தை இந்த விபரீத செயலை செய்திருக்கிறார்” என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.