கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவள்ளா தாலுகா பிரியங்கா பகுதியின் சந்தீப்(34) என்பவர் வசித்துவருகிறார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கமிட்டி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் திருவள்ளாவில் உள்ள சேத்தன்ஹரி பகுதியில் நேற்று இரவு 8 மணிக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவரைப் பின்தொடர்ந்தனர் கும்பல் திடீரென மறித்தனர். அதன் பிறகு அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தீபை 11 முறை கொடூரமாக குத்தினர்.
இவர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்கு முன் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சந்தீப் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சந்தீப் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 5 இளைஞர்கள் கொண்ட கும்பல் சந்தீப்பை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜிஷினு மற்றும் ஸ்ரீஜித் ஆகிய 2 பேருக்கும் இந்த கொலையில் சமந்தம் இருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர். இதனிடையில் தங்கள் கட்சி நிர்வாகி சந்தீபை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கொலை செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.