ஆன்லைன் கேம்மிற்காக 17 வயது சிறுவன் 7 லட்சம் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாக வருவதுடன், அதில் பணத்தை இழந்து தவிக்கும் சம்பவங்களும், சிறுவர்கள் பலர் விளையாட்டுகளில் பணத்தை முதலீடு செய்வதற்காக ஆங்காங்கே திருடும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் சென்னையில் 17 வயது சிறுவன் ஒருவன் தனது கீழ் வீட்டில் வசிக்கும் 76 வயது மருத்துவர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 7 லட்சத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் தனியாக வசிப்பதால், ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு அந்தச் சிறுவனின் உதவியை நாடி வந்துள்ளார்.
அந்த மருத்துவருக்கு உதவி வந்த சிறுவன் ஆன்லைன் கேம்மிற்கு அடிமையானவன். மருத்துவருக்கு உதவுவது போல நடித்து, ரூபாய் 7 லட்சம் பணத்தை திருடியுள்ளார். இதுகுறித்து உடனடியாக அறிந்த மருத்துவர், காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.