10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர் பகுதியில் ஆண்ட்ரூஸ் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேத்யூ ஆம்புரூஸ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஆலப்பாக்கத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மேத்யூ ஆம்புரூஸ் கணக்கு தேர்வை சரியாக எழுதவில்லை என தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு கவலைப்பட வேண்டாம் என கூறி பெற்றோர் சிறுவனுக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில் தேர்வுக்காக படிக்க செல்கிறேன் என கூறி விட்டு மாடிக்கு சென்ற மேத்யூ ஆம்புரூஸ் நீண்ட நேரமாகியும் கீழே இறங்கி வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாடிக்கு சென்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது மேத்யூ ஆம்புரூஸ் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.