Categories
தேசிய செய்திகள்

10th Exam: 2 லட்சம் பேர் தோல்வி, 34 தற்கொலை…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஆந்திராவில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 2 லட்சம் மாணவ மாணவியர் தோல்வியடைந்தனர். இதில் மிகவும் சோகமான செய்தி என்னவென்றால் தோல்வி அடைந்தவர்களில் 34 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 70.70% மாணவிகளும், 64.02% மாணவர்களும் வெற்றி பெற்றனர். மேலும் 2 லட்சம் பேர் தோல்வியடைந்தனர்.

அதில் 34 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவ மாணவியரின் பெற்றோருக்கு ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆறுதல் தெரிவித்துள்ளார். கை விடுக தற்கொலை எண்ணத்தை, காத்திருக்கிறது புது வாழ்க்கை. Call – 442 464 0050, 442 464 0060

Categories

Tech |